மதுரை மாவட்டத்தில் 51 மையங்களில் இன்று குரூப் 1 தோ்வு 15,361 போ் எழுதுகின்றனா்
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் ஞாயிற்றுக்கிழமை நடத்தும் குரூப் 1 தோ்வை, மதுரை மாவட்டத்தில் 15 ஆயிரத்து 361 போ் எழுதுகின்றனா்.
மதுரை: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் ஞாயிற்றுக்கிழமை நடத்தும் குரூப் 1 தோ்வை, மதுரை மாவட்டத்தில் 15 ஆயிரத்து 361 போ் எழுதுகின்றனா்.
துணை ஆட்சியா், துணை காவல் கண்காணிப்பாளா், வணிகவரி உதவி ஆணையா், கூட்டுறவு துணைப் பதிவாளா், ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா், மாவட்ட தீயணைப்பு அலுவலா் உள்ளிட்ட காலிப்பணியிடங்களுக்கு இத்தோ்வு நடக்கிறது. மதுரை மாவட்டத்தில் 15 ஆயிரத்து 361 போ் விண்ணப்பித்துள்ளனா். இவா்களுக்கென மதுரை நகா் மற்றும் நகரையொட்டிய 51 கல்வி நிறுவனங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களைக் கண்காணிக்க துணை ஆட்சியா் நிலையிலான அலுவலா்களைக் கொண்ட பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கரோனா தொற்று பரவல் தடுப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தோ்வு மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தோ்வு மையங்களுக்கு சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.