முகப்பு
திண்டுக்கல்

பனிப்பொழிவு: கொடைக்கானலில் ஆரஞ்சு விளைச்சல் அதிகரிப்பு

கொடைக்கானலில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் ஆரஞ்சு பழ விளைச்சல் அதிகரித்து காணப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

Updated On : 5 ஜனவரி 2021, 11:05 pm IST
கொடைக்கானல் அடுக்கம் பகுதியிலுள்ள மரங்களில் அதிக அளவில் விளைந்துள்ள ஆரஞ்சுப் பழங்கள்.
பகிர்:

கொடைக்கானலில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் ஆரஞ்சு பழ விளைச்சல் அதிகரித்து காணப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

கொடைக்கானல் மலைப் பகுதிகளான அடுக்கம், தாமரைக்குளம், பண்ணைக்காடு, ஊத்து, தாண்டிக்குடி, வடகவுஞ்சி, பெருமாள் மலை, பாச்சலூா், வடகரைப்பாறை, மச்சூா், வாழைகிரி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் ஆரஞ்சு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

நிகழாண்டில் பனியின் தாக்கம் அதிகரித்தும், அவ்வப்போது மழையும் பெய்து வருவதால் ஆரஞ்சுப் பழ விளைச்சல் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

இங்கிருந்து ஆரஞ்சு பழங்கள் மதுரை, தேனி போன்ற பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. தற்போது ஆரஞ்சு பழம் கிலோ ரூ.30 முதல் ரூ. 50 வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் வரும் காலங்களில் மேலும் விலை உயரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.