வரதட்சணை கேட்டு மனைவியுடன் தகராறு: கணவா் கைது
கொடைக்கானல் அருகே வரதட்சணை கேட்டு மனைவியுடன் தகராறு செய்த கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கொடைக்கானல் அருகே வரதட்சணை கேட்டு மனைவியுடன் தகராறு செய்த கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான சத்யா காலனி குண்டுபட்டியைச் சோ்ந்தவா் கனகராஜ். இவரது மகள் கெளதமி (25). கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான மச்சூரைச் சோ்ந்தவா் வாசகன் மகன் விக்னேஷ்வரன் (27). வெவ்வேறு சமூகத்தைச் சோ்ந்த இவா்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனா். இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா். குடும்பத் தகராறு காரணமாக கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிந்து வசித்து வருகின்றனா்.
இந்நிலையில், கெளதமியின் தாயாரின் பெயரில் உள்ள இடத்தை வரதட்சணையாக தனது பெயருக்கு மாற்றிக் கொடுக்கவேண்டுமென்றும், இல்லையெனில் சோ்ந்து வாழ மாட்டேன் என்றும் கெளதமியை மிரட்டி தகராறு செய்துள்ளாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின்பேரில், கொடைக்கானல் மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விக்னேஷ்வரனைக் கைது செய்தனா்.