முகப்பு
வேலைவாய்ப்பு

ஐஐஎம் மும்பை-ல் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்..?

ஐஐஎம் மும்பை-இல் மேலாண்மை பயிற்சி பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து...

Updated On : 14 ஜூன் 2026, 5:53 pm IST
ஐஐஎம் மும்பை-ல் வேலை - IIM
பகிர்:

என்ஐடிஐஇ மும்பை என்று அழைக்கப்பட்ட ஐஐஎம் மும்பை, 1963-இல் மத்திய அரசால் நிறுவப்பட்டது. ஐஐஎம் மும்பை தொடர்ந்து நாட்டின் முன்னணி மேலாண்மை கல்வி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. 2025-ஆம் ஆண்டிற்கான தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் தரவரிசையில், நாட்டில் உள்ள மேலாண்மை நிறுவனங்களுக்கிடையே ஐஐஎம் மும்பை 6-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

பகுப்பாய்வு, பொருளாதாரம் மற்றும் நிதி, சந்தைப்படுத்தல், ஓஎஸ்சிஎம், நிலைத்தன்மை, தொழில்முனைவு மற்றும் ஓபிஎச்ஆர் போன்ற பல்வேறு செயல்பாட்டுத் துறைகளில் திறமையான நிபுணர்களை உருவாக்குவதில் ஐஐஎம் மும்பை உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.

நாட்டின் நிதித் தலைநகரில் அமைந்துள்ள ஐஐஎம் மும்பை, முன்னணி பெருநிறுவனங்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது. இது வகுப்பறை அறிவை, துறைசார் நிபுணர்களின் நடைமுறை அனுபவ அறிவுடன் ஒருங்கிணைக்கும் கூடுதல் சிறப்பம்சத்தை வழங்குகிறது. ஐஐஎம் மும்பை மூன்று பக்கங்களிலும் ஏரிகளால் சூழப்பட்ட்ட கண்களுக்கு இனிய வளாகங்களை கொண்டுள்ளது.

Advertisement

Advertisement

மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் தன்னாட்சி அதிகாரம் கொண்ட இந்நிறுவனத்தில், தற்போது ஒப்பந்த அடிப்படையிலான ஆசிரியர் அல்லாத பணியிடங்களகான மேலாண்மை பயிற்சி பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சிறந்த கல்விப் பின்னணியும், ஆர்வமும் கொண்டவர்களிடமிருந்து வரும் 16 ஆம் தேிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலான இந்த பணிகளுக்கு ஆரம்பத்தில் ஓராண்டு காலத்திற்கு நியமனம் செய்யப்படும், பணியாளர்களின் திருப்திகரமான செயல்பாடு மற்றும் நிறுவனத்தின் தேவை ஆகியவற்றின் அடிப்படையில், ஆண்டுதோறும் நீட்டிக்கப்பட்டு மேலும் மூன்று ஆண்டுகள் வரை தொடரப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: Admn/Rectt/2026/16

பணி: Management Trainee

பிரிவு: Analytics & Decision Science

காலியிடம் : 1

பிரிவு: Operations & Supply Chain

காலியிடம்: 1

பிரிவு : Sustainability Management

காலியிடம்: 1

பிரிவு: OBHR Management

காலியிடம்: 1

பிரிவு : Marketing

காலியிடங்கள்: 2

பிரிவு: Management Trainee (Admin)

காலியிடங்கள் : 4

சம்பளம்: மாதம் ரூ.35,000 - 45,000

வயது வரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் தேர்ச்சி அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://iimmumbai.ac.in/careers என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 16.6.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

summary

IIM Mumbai Recruitment 2026 for Non-Faculty Positions on contractual basis...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.