ரூ.7,000 கோடி மதிப்பு... மழையால் 2 மாதங்களில் இடிந்த சுரங்கப் பாதை!
கனமழையால் மும்பை - புணே அதிவிரைவுச் சாலையில் புதிதாக திறக்கப்பட்ட சுரங்கப் பாதை சேதமடைந்தது.
கனமழை காரணமாக மும்பை - புணே இடையிலான அதிவிரைவுச் சாலையில் புதிதாக திறக்கப்பட்ட சுரங்கப் பாதை சேதமடைந்தது.
ரூ.7,000 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு கடந்த மாதம் திறக்கப்பட்ட நிலையில், ஒருசில வாரங்களிலேயே சுரங்கப் பாதையின் ஒரு பகுதி உருக்குலைந்து சேதமடைந்துள்ளது.
இதனால், நெடுஞ்சாலையின் இருமார்கங்களிலும் வாகனங்கள் பலமணி நேரங்களாக அணிவகுத்து நின்றன. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், நிலைமை சீராகும் வரை மும்பை - புணே மற்றும் புணே - மும்பை வழித்தடங்களை யாரும் பயன்படுத்த வேண்டாம் என மாநகராட்சி தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மகாராஷ்டிர மாநில சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மும்பை - புணே இடையில் 19 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. மிஸ்ஸிங் லிங்க் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சுரங்கத்திற்காக ரூ.7,000 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் மாநில அரசால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இந்த சுரங்கத்தால் மும்பை - புணே இடையிலான பயண நேரம் 20 - 25 நிமிடங்கள் குறையும் என மாநில அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக, இந்த சுரங்கத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. மக்கள் பயன்பட்டிற்கு திறந்து 9 வாரங்களே ஆன நிலையில், சுரங்கம் சேதமடைந்தது, வாகன ஓட்டிகளை கடும் சிரமத்திற்குள்ளாக்கியுள்ளது.
மும்பை - புணே வழித்தடத்தின் இரு மார்கங்களிலும் வாகனங்கள் திங்கள் கிழமை முழுவதுமே அணிவகுத்து நின்றன. உணவு, குடிநீர் இன்றி வாகன ஓட்டிகள் தவித்த நிலையில், மேலும் நெரிசலைத் தவிர்க்கும் வகையில் இரு மார்கத்திலும் மக்கள் யாரும் இந்த சாலையைப் பயன்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Tunnel built at a cost of ₹7,000 crore and inaugurated last month has collapsed Mumbai Pune Expressway tunnel
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.