நிலச்சரிவு: மும்பை - புணே ரயில் சேவை பாதிப்பு
கனமழை காரணமாக ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் மும்பை- புணே ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் மும்பை- புணே ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருவதால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். தலைநகர் மும்பையிலும் கனமழை நீடிப்பதால் பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியுள்ளது.
இதனிடையே மும்பை, தாணே மற்றும் ராய்கட் மாவட்டங்களுக்குக் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவசியமின்றி மக்கள் வெளிவர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ராய்கட் மாவட்டத்தில் பெய்த கனமழையால், பரபரப்பான மும்பை-கோவா நெடுஞ்சாலையில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
Advertisement
Advertisement
இதனால் சில மணிநேரங்களுக்குப் போக்குவரத்து முடங்கியதுடன், ஆயிரக்கணக்கான பயணிகள் தவிப்புக்குள்ளாகினர் என்று அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர். இந்த நிலையில் கனமழை காரணமாக கர்ஜத் - லோனாவாலா இடையிலான ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
நிலச்சரிவால் தண்டவாளத்தில் பாறைகள் விழுந்ததால் மும்பை - புணே ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 16 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, 9 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன. சீரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவுறுத்தியுள்ளார்.
Train services on the Mumbai-Pune railway route were suspended early Monday after heavy rains triggered landslides in the Karjat-Lonavala Bhor Ghat section, officials said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.