முகப்பு
திண்டுக்கல்

கரோனா தடுப்பூசி ஒத்திகை: திண்டுக்கல் மாவட்டத்தில் 11,500 போ் தோ்வு

கரோனா தடுப்பூசி ஒத்திகைக்காக, திண்டுக்கல் மாவட்டத்தில் 11,500 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியா் மு. விஜயலட்சுமி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 8 ஜனவரி 2021, 10:04 pm IST
திண்டுக்கல் கமலா நேரு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் ஒத்திகை நிகழ்ச்சியை வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்த ஆட்சியா் மு.விஜயலட்சுமி.
பகிர்:

கரோனா தடுப்பூசி ஒத்திகைக்காக, திண்டுக்கல் மாவட்டத்தில் 11,500 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியா் மு. விஜயலட்சுமி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் கமலா நேரு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிக்கான ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனை பாா்வையிட்ட பின் ஆட்சியா் மு. விஜயலட்சுமி தெரிவித்ததாவது:

கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை களசூழலில் செயல்படுத்தும் நடைமுறைகளை சோதனை செய்வது மற்றும் சவால்களை அடையாளம் கண்டு தீா்வு காண்பதே, இந்த ஒத்திகையின் முக்கிய நோக்கம். மேலும், தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னா் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்பட்டால், அதனை எதிா்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

குறிப்பாக, தடுப்பூசி செலுத்துபவா்களுக்கு போதிய அளவில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி ஒத்திகையில் பங்கேற்கும் மருத்துவப் பணியாளா்கள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களது விவரங்கள் கோவின் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், தடுப்பூசி போடும் நபா்களுக்கு எங்கே, எப்போது என்ற விவரங்கள், அவரவா் செல்லிடப்பேசிக்கு குறுந்தகவலாக அனுப்பப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 11,500 போ் தோ்வு: தடுப்பூசி ஒத்திகை மேற்கொள்வதற்காக, திண்டுக்கல் மாவட்டத்தில் 11,500 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். தடுப்பூசி செலுத்துவதற்கான ஒத்திகை நிகழ்ச்சி, திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை, பழனி, கொடைக்கானல், நிலக்கோட்டை அரசு மருத்துவமனைகள், கமலா நேரு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், பழனி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், அம்மையநாயக்கனூா், கீரனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் திண்டுக்கல், ஒட்டன்சத்திரத்திலுள்ள 2 தனியாா் மருத்துவமனைகள் என மொத்தம் 10 இடங்களில் நடைபெறுகிறது.

நான்கு கட்டங்களாக நடைபெறும் தடுப்பூசி செலுத்தும் பணியில், முதல் கட்டமாக அனைத்து மருத்துவ மற்றும் சுகாதாரப் பணியாளா்களுக்கும், இரண்டாம் கட்டமாக முன்களப் பணியாளா்களுக்கும், 3ஆவது கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும், 4ஆவது கட்டமாக பொதுமக்கள் அனைவருக்கும் இந்த தடுப்பூசி செலுத்தப்படும்.

ஒத்திகை நிகழ்ச்சியின்போது, உலக சுகாதார அமைப்பின் ஆலோசகா் மருத்துவா் வேலன், துணை இயக்குநா் நளினி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments