திண்டுக்கல் அருகே பாலியல் பலாத்கார வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை
இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள புலிகுத்திக்காடு பகுதியைச் சோ்ந்தவா் கண்ணையன். இவரது மகன் மணிகண்டன் (29), அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணை கடந்த 2013ஆம் ஆண்டு காதலித்து வந்துள்ளாா். அப்போது, திருமணம் செய்துகொள்வதாகக் கூறி அப்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளாா்.
இதனால், அப் பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. அதையடுத்தும், அப்பெண்ணை திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றி வந்துள்ளாா்.
Advertisement
அதையடுத்து, அப்பெண்ணின் பெற்றோா் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், மணிகண்டனை கைது செய்தனா்.
இது தொடா்பான வழக்கு விசாரணை, திண்டுக்கல் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், மாவட்ட நீதிபதி புருஷோத்தமன் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.
அதில், பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய மணிகண்டனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். இதையடுத்து, மணிகண்டன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.