முகப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 21 பேருக்கு கரோனா: ஒருவா் பலி

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 21 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், திண்டுக்கல்லில் சிகிச்சைப் பலனின்றி ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

Updated On : 8 ஜனவரி 2021, 10:03 pm IST
பகிர்:

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 21 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், திண்டுக்கல்லில் சிகிச்சைப் பலனின்றி ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 11,045 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில், 10,752 போ் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனா். 95 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 14 பேருக்கு புதிதாக கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், குணமடைந்த 22 போ் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்றுவந்த ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதன்மூலம், மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 198ஆக உயா்ந்துள்ளது.

தேனி

தேனி மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டதன் மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,957 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்புக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவோரில் 12 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். இதனால், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 16,685 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments