விடைத்தாள்களை தவறாக திருத்தும் ஆசிரியர்களுக்கு அபராதம்
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விடைத்தாள்களை தவறாக திருத்தும் ஆசிரியர்களுக்கு, தண்டனை வழங்கப்படும் என்று கர்நாடக கல்வித்துறை அறிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களின் விடைத்தாள்களை தவறாக திருத்தும் ஆசிரியர்களுக்கு, தண்டனை வழங்கப்படும் என்று கர்நாடக கல்வித்துறை அறிவித்துள்ளது.
பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்கள், மாணவர்களின் விடைத்தாள்களை தவறாக திருத்தினால் ஆசிரியர்கள் தான் முழு பொறுப்பேற்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு தவறுக்கு ஒவ்வொரு விதமான தண்டனை வழங்கப்படும் என்று கல்வித்துறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் அதிகபட்சமாக 15 மதிப்பெண் வரை வித்தியாசம் இருந்தால், விடைத்தாள் திருத்தியவர்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்படும்.
அதற்கு மேல் மதிப்பெண்களில் வித்தியாசம் இருந்தால், தவறு செய்த ஆசிரியருக்கு ரூ.1000 அபராதம் வழங்கப்படும். மேலும் கவனக்குறைவாக இருந்தால், ஊக்கத்தொகை நிறுத்தப்படும் என்று கர்நாடக கல்வித்துறை அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement