முகப்பு
கல்வி

CAT - 2013 நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்.,26 கடைசி

ஐஐஎம்-களில் வணிக மேலாண்மை தொடர்பான படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஐஐஎம்.,ஆல் நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வு CAT தேர்வில் பங்கேற்கலாம்.

Updated On : 22 ஆகஸ்ட், 2013 at 12:09 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:18 PM

மத்திய அரசின் மேலாண்மையியல் உயர்கல்வி நிறுவனங்களான ஐஐஎம்-களில் வணிக மேலாண்மை தொடர்பான படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஐஐஎம்.,ஆல் நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வு CAT தேர்வில் பங்கேற்கலாம்.

கல்வித்தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானதாகும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முக தேர்வு, குழுவிவாதம் அடிப்படையில் மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படும். எழுத்து தேர்வு நாடு முழுவதும் உள்ள 40 நகரங்களில் அக்டோபர் 16 முதல் செப்டம்பர் 11ம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.

Advertisement

CAT-2013 நுழைவுத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் தமிழ்நாட்டின் திருச்சியிலுள்ள ஐஐஎம்-களில் வியாபார மேலாண்மை தொடர்பான படிப்புகளில் சேரலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1600 (எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி) பிரிவினர்களுக்கு ரூ.800.

விண்ணப்பிக்கும் முறை: www.cat2013.iimidr.ac.in என்ற இணையதளத்தில் செப்.,26ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விபரங்களுக்கு இணையதளத்தை பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.