முகப்பு
படிப்புகள்

படிப்பு மட்டும் போதுமா? செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?

பட்டப்படிப்பு மட்டும் காப்பாற்றாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?

Updated On : 20 ஏப்ரல் 2026, 12:14 pm IST
செய்யறிவு - ஐஏஎன்எஸ்
பகிர்:

செய்யறிவு எனப்படும் செயற்கை நுண்ணறிவு எல்லோருடைய வேலையையும் ஒரே நேரத்தில் ஒன்று போல பறித்துவிடவில்லை.

தற்போது செய்யறிவு சில தகவல் தொழில்நுட்ப பணிகளை மிகச் சிறப்பாக செய்வதாகக் கூறப்படுகிறது. அதில், முதல் இடத்தில் இருப்பது கணினி தரவுகளை செயலாக்குதல், வடிவம்-தோற்றத்தை அடையாளம் காணுதல், புதிய உள்ளடக்கங்களை உருவாக்குதல் மற்றும் விதிகளை உருவாக்கிக் கொடுத்துவிட்டால் அதனை மிகச் சரியாக பின்பற்றுதல் போன்றவற்றில் சிறந்து விளங்குகிறது.

இவற்றில் தொடர்புடைய பணிகளில் இருப்பவர்களுக்கு செய்யறிவு ஆபத்தாகவே இருக்கும். அதுபோல, ஒருவர் செய்யும் வேலையை மீண்டும் மீண்டும் செய்வதாக இருந்தாலும் அதனை மிக விரைவாக செய்யறிவால் செய்துவிட அல்லது செய்யவைத்துவிட முடியும்.

Advertisement

Advertisement

இங்கே பட்டப்படிப்பு படிக்கப் போகும் படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது. அதாவது, அறிவாளியான இளைஞர்கள், செய்யறிவைக் கண்டு பயப்படக் கூடாது. செய்யறிவைக் கொண்டு வேலை வாங்கும் இடத்துக்கு நீங்கள் செல்வதாகவே இருக்க வேண்டும்.

ஒவ்வொரு வேலையையும் செய்யும்போது மனிதர்களை வைத்துத்தான் செய்ய வேண்டுமா, இயந்திரத்தால் செய்துவிட முடியுமா என்று கேள்வி கேட்டுப் பாருங்கள். எந்த பதில் வருகிறதோ அதைப் பொருத்து அந்த படிப்பைத் தேர்வு செய்யலாம். அல்லது அதில் பயிற்சி பெறலாம்.

தற்போது, நான்கு வேலைகளை மட்டுமே செய்யறிவால் செய்ய முடியாது என்று கணக்கிடப்பட்டுள்ளது.

மனிதர்களின் உணர்வுப்பூர்வமான பணிகளை கையாளுவோர்.. மன ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது, மனோதத்துவ நிபுணர்கள், மன அழுத்தத்துக்கு சிகிச்சை அளிப்போர் போன்றவர்களின் பணிகளுக்கு தற்போதைக்கு பாதிப்பில்லை.

மருத்துவர்கள்.. செவிலியர்கள், பிசியோதெரபி உள்ளிட்ட சுகாதாரத் துறை நிபுணர்களுக்கு செய்யறிவு மாற்றாக மாறுவதற்கான காலம் இப்போதைக்கு இல்லை என்று கூறப்படுகிறது.

இதுபோலவே, எலக்ட்ரீஷியன், பிளம்பர்கள், மெக்கானிக் வேலை செய்வோர் போன்று உடல் உழைப்பு மற்றும் மூளை திறனுடன் இணைந்துசெய்யும் சில வேலைகள் இப்போதைக்கு தப்பிக்கலாம்.

வழக்குரைஞர்கள், நிறுவன திட்டவகுப்பாளர்கள், சிறப்பு நிபுணர்கள், கொள்கைகளை உருவாக்குவோர், புத்தாக்க நிபுணர்கள், புதிய தகவல்களை உருவாக்கவோர் போன்ற வேலைகளையும் செய்யறிவு இதுவரை தொடாத துறைகளாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

எனவே, இதுபோன்ற துறைகளைத் தேர்வு செய்து மாணவர்கள் கல்வி பயிலலாம். அல்லது செய்யறிவைக் கொண்டு பணியாற்றும் வேலைகளை கற்றுக் கொள்ளலாம்.

summary

Is education enough What can you do to prevent your education from costing you your job?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.