நீட் தெரியும்! அது என்ன நாடா தேர்வு? யார் எழுத வேண்டும்?
கட்டடக் கலைத் துறையில் பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கான நாடா (NATA) தேர்வு பற்றி..
நாட்டில் கட்டடக் கலை தொடர்பான படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் நாடா (NATA) தேர்வில் எடுத்த மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டே மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.
எனவே, பிஆர்க் எனப்படும் கட்டடக் கலையில் இளநிலை அல்லது முதுநிலை கல்வி பயில விரும்பும் மாணவர்கள் நாடா தேர்வை எழுத வேண்டும். தேசிய ஆப்டிடியூட் டெஸ்ட் இன் ஆர்கிடெக்சர் - என்ஏடிஏ எனப்படுகிறது. இதனை கவுன்சில் ஆஃப் ஆர்கிடெக்சர் என்ற அமைப்பு நடத்துகிறது.
மாணவர்களின் வரையும் ஆற்றல், தர்க்கரீதியான சிந்தனை போன்றவற்றை மதிப்பிடும் வகையில் தேர்வு இருக்கும். பல கட்டங்களாக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.
Advertisement
Advertisement
கணிதம், இயற்பியல், வேதியியல், பொது அறிவு மற்றும் வரைதல் திறன் கண்டறிவது என்ற வகையில் தேர்வு நடைபெறும். மொத்த மதிப்பெண்கள் 200. 70 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி என்று அறிவிக்கப்படும். இந்த தேர்வை எழுத மொத்த கால அவகாசம் 3 மணி நேரங்கள்.
இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பது, தேர்வு நடைமுறைகள் என அனைத்தையும் மாணவர்கள் https://www.nata.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
இந்த தேர்வும் நாட்டில் நடைபெறும் கடினமான தேர்வுகளில் ஒன்றுதான் என்பதால், அடுத்த ஆண்டு தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் இன்று முதலே அதற்குத் தயாராக வேண்டியது அவசியம்.
Know about NEET But what is this NATA exam? Who needs to take it?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.