சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்
சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது என்பது குறித்த முக்கிய தகவல் வெளியானது.
நாடு முழுவதும் சுமார் 16 லட்சம் மாணவர்கள் எழுதியிருக்கும் சிபிஎஸ்இ பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்வு முடிவுகள் வெளியானதும், சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளுக்கான இணையதளத்திலும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என்று தெரிவக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழகப் பாடத்திட்டத்தில் பயின்றவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பப் பதிவுகள் தொடங்கிய நிலையில், சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
ரிலேட்டிவ் கிரேடிங் முறை - மாணவர்களுக்கு மதிப்பெண்களின் அடிப்படையில் ரிலேட்டிவ் கிரேடிங் முறை நடைமுறையில் உள்ளது. அதாவது, ஒரு பாடத்தில் அனைத்து மாணவர்களும் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் ஏ, ஏ1, பி, பி1 என கிரேட் இடப்படும். இதனால், வினாத்தாள் கடினமாக அல்லது எளிதாக இருப்பதற்கு ஏற்ப கிரேடிங் அமையும் என்பதால் மாணவர்களுக்கு நன்மையளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்பதால், அவ்வப்போது மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Important information regarding the release date of CBSE +2 exam results has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.