சிபிஎஸ்இ பிளஸ் 2 மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பம்: அவகாசம் நீட்டிப்பு!
பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது தொடர்பாக...
பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு ஜூன் 7-ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
பிளஸ் 2 வகுப்பு விடைத்தாள் பிரச்னை (விடைத்தாளில் பக்கங்கள் மற்றும் கூடுதல் விடைத்தாள், வரைபடம், கிராப்ஸ் காணாமல் போயிருப்பது) மற்றும் மறுமதிப்பீட்டுக்குக்கான இணையவழி விண்ணப்ப பதிவு செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) தொடங்கியுள்ளது.
விடைத்தாள் தொடர்பான பிரச்னைக்கும், மதிப்பீட்டில் திருப்தி இல்லாத மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விடைத்தாளில் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காண விரும்பினால் அனைத்து பிரச்னைக்கும் ஒரேயொரு விண்ணப்பம் போதுமானது. தனித்தனி விண்ணப்பம் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
இந்த வசதியை விடைத்தாள் நகல் பெற்ற மாணவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். விடைத்தாள் பிரச்னைக்கு ஒரு பாடத்துக்கு கட்டணம் ரூ. 100. மறுமதிப்பீட்டுக்கு கட்டணம் ரூ. 25 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உரிய கட்டணத்தை யுபிஐ, கிரெடிட் அட்டை, டெபிட் அட்டை மற்றும் நெட்பேங்கிங் வசதி மூலம் இணையவழியில் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இணையவழியில் விண்ணப்பிக்க கால அவகாசம் நேற்றுடன் (ஜூன் 6) முடிவடைந்த நிலையில், இன்று(ஜூன் 7) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இணையவழி விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இதர வழிகளில் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Regarding issues with Class 12 public exam answer sheets, the CBSE has announced that applications for re-evaluation can be submitted online until June 7.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.