முகப்பு
செய்திகள் / கட்டுரைகள்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா?

10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ இந்த வாரம் வெளியிடுமா என்பது பற்றி..

Updated On : 29 ஜூன் 2026, 11:29 am IST
10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!
பகிர்:

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 10-ஆம் வகுப்புப் படித்து இரண்டாவது பொதுத் தேர்வை எழுதியிருக்கும் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இந்த வாரத்தில் வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை சிபிஎஸ்இ இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. தேர்வு முடிவுகள் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்பதால், சிபிஎஸ்இ இணையதளத்தை மாணவர்கள் தொடர்ந்து கவனிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

முதல்முறையாக இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்ட 10ஆம் வகுப்பு இரண்டாவது பொதுத் தேர்வை 6.68 லட்சம் மாணவர்கள் எழுதியிருக்கிறார்கள். இதன் மூலம், குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கும் வகையில் 2வது பொதுத் தேர்வு நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments