FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வா? உண்மை என்ன?

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு அட்டவணை வெளியாகியிருக்கிறது. ஆனால் அது இந்த ஆண்டு மாணவர்களுக்கானது அல்ல

14 அக்டோபர் 2026, 1:32 pm IST
பொதுத் தேர்வு
பகிர்:

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு அட்டவணை வெளியாகியிருக்கிறது. ஆனால் அது இந்த ஆண்டு மாணவர்களுக்கானது அல்ல

நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் 11ஆம் வகுப்புக்கான அட்டவணையும் இணைந்துள்ளதால், இந்த ஆண்டு 11ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆனால், இந்த கல்வியாண்டில் 11ஆம் வகுப்புப் பயிலும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு இல்லை. இதற்கு முன்பு அதாவது 2018 முதல் 2025ஆம் ஆண்டு வரை நடைபெற்ற பொதுத் தேர்வுகளில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தமிழ்நாட்டில் அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது. மார்ச் 3-ஆம் தேதி 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு தொடங்குகிறது.

அது போல இந்த ஆண்டு மார்ச் 5-ஆம் தேதி 11-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வும், மார்ச் 17ஆம் தேதி 10ம் வகுப்புப் பொதுத் தேர்வும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சென்னை அரசு தேர்வுகள் இயக்கக கூட்ட அரங்கில் இன்று வெளியிட்டார்.

11ஆம் வகுப்புக்கு மார்ச் 3ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பொதுத் தேர்வு முடிவு மே 7ஆம் தேதி வெளியாகவிருக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments