மறந்தே விட்டதா சிபிஎஸ்இ? எதை? பொதுத்தேர்வு அட்டவணையை!
10, 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட வேண்டும் என்பதை சிபிஎஸ்இ மறந்தே விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது பற்றி.
2026 - 27ஆம் கல்வியாண்டில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை இன்னமும் வெளியாகாத நிலையில், சிபிஎஸ்இ நிர்வாகம் மறந்தேவிட்டதோ என்று மாணவர்களும் பெற்றோர்களும் கலக்கத்தில் உள்ளனர்.
பொதுத் தேர்வு அட்டவணை அக்டோபர் மாதத்தில் இருந்து எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நவம்பர் மாதம் வந்து விட்ட பிறகும் கூட அட்டவணை வெளியாவதற்கான சுவடே தெரியவில்லை.
கடந்த ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி தேர்வு அட்டவணை வெளியான நிலையில், இன்று ஒருவேளை, சிபிஎஸ்இ தேர்வு அட்டவணையை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
தமிழ்நாட்டில், அரசுப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை ஏற்கனவே வெளியாகிவிட்டது. மார்ச் - ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் தேர்வுக்கான அட்டவணையே வெளியான நிலையில், பிப்ரவரியில் தொடங்கும் தேர்வுக்கான அட்டவணையை சிபிஎஸ்இ வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பொதுவாக தேர்வு முடிவுகள்தான் தாமதமாக வெளியாகும், அதிலும் தப்பும் தவறுமாக மதிப்பெண்கள் போடப்பட்டு மாணவர்கள் அலைக்கழிக்கப்படுவார்கள். இந்த ஆண்டு அட்டவணைக்கே இந்த பாடுபடுகிறார்கள் மாணவர்கள்.
சமூக ஊடகங்களில் வெளியாகும் எந்த தகவலையும் மாணவர்கள் நம்ப வேண்டாம். cbse.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்பதால், மாணவர்கள் பெற்றோர் அந்த இணையதளத்தை அவ்வப்போது பார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.