FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வெளியானது 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை!

வெளியானது 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை

14 அக்டோபர் 2026, 12:58 pm IST
பொதுத் தேர்வு அட்டவணை - ENS
பகிர்:

தமிழ்நாட்டில் அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது. மார்ச் 3-ஆம் தேதி 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு தொடங்குகிறது.

கடந்த ஆண்டு 11ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு மார்ச் 5-ஆம் தேதி 11-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வும், மார்ச் 17ஆம் தேதி 10ம் வகுப்புப் பொதுத் தேர்வும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சென்னை அரசு தேர்வுகள் இயக்கக கூட்ட அரங்கில் இன்று வெளியிட்டார்.

Advertisement

Advertisement

மார்ச் மாதம் பொதுத் தேர்வுகள் தொடங்கவிருக்கும் நிலையில், மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆயத்தமாகும் வகையில், தேர்வு அட்டவணை ஒரு சில மாதங்களுக்கு முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது.

மார்ச் 3ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெறுகிறது.

பிப். 8ஆம் தேதி முதல் 18ஆம் தேதிவரை பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

12ஆம் வகுப்பு அட்டவணை

தமிழ் - 03.03.2027

ஆங்கிலம் - 09.03.2027

வேதியியல் - 12.03.2027

உயிரியல் - 19.03.2027

இயற்பியல் - 23.03.2027

கணிதம் - 29.03.2027

கணக்குப் பதிவியல் - 12.03.2027

கணினி அறிவியல் -15.03.2027

வரலாறு - 19.03.2027

பொருளியல் - 23.03.2027

விலங்கியல் - 29.03.2027

புவியியல் - 12.03.2027

கணினி பயன்பாடு - 15.03.2027

உயிர் வேதியியல் - 15.03.2027

அரசியல் அறிவியல் - 15.03.2027

புள்ளியியல் - 15..03.2027

வணிக கணிதம் - 19..03.2027

பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு

மார்ச் 17ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 12ஆம் தேதி வரை 10ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நடைபெறுகிறது.

தமிழ் பாடம் - 17.03.2027

ஆங்கில பாடம் - 25.03.2027

கணிதம் - 31.03.2027

அறிவியல் - 05.04.2027

சமூக அறிவியல் - 09.04.2027

பொதுத் தேர்வெழுதும் மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments