FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

10-ஆம் வகுப்பு 2-ம் கட்ட பொதுத்தேர்வு முடிவு வெளியானது: சிபிஎஸ்இ

2026-ஆம் ஆண்டிற்கான 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது தொடர்பாக...

Updated On : 19 ஜூலை 2026, 10:53 pm IST
10 ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! - படம்: பிடிஐ.
பகிர்:

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட பொதுத்தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.

தேசியக் கல்விக் கொள்கையின் பரிந்துரைகளுக்கு இணங்க, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடப்பு ஆண்டு(2026) முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு கட்ட பொதுத்தேர்வுகளை அறிமுகப்படுத்தியது.

இதில், முதலாவது பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி 17 முதல் மார்ச் 11 வரையிலும், அதைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட பொதுத்தேர்வு மே 15 முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெற்றது. தங்கள் மதிப்பெண்ணை அதிகரிக்க விரும்பும் மாணவர்களுக்காக இரண்டாவது கட்ட பொதுத்தேர்வு வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், முதல்கட்ட பொதுத்தேர்வை மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டும்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இரண்டாம் கட்ட பொதுத்தேர்வுக்கான முடிவு சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டின் முதல் மற்றும் இரண்டாம் கட்டப் பொதுத்தேர்வு முடிவுகளை ஒருங்கிணைத்த பிறகு, பத்தாம் வகுப்பு மாணவர்களின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 96.78 சதவீதமாக உள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

இரண்டாம் கட்ட தேர்வு எழுதிய மாணவர்கள், வெளிநாடுகளில் உள்ள சிபிஎஸ்இ இணைப்பு பெற்ற பள்ளிகளின் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை results.digilocker.gov.in, http://results.digilocker.gov.in என்ற இணையதம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

முதல் கட்ட பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களை மேம்படுத்தும் நோக்கில் இரண்டாவது கட்ட பொதுத்தேர்வுக்கு 6 லட்சத்து 64 ஆயிரத்து 27 மாணவர்கள் பதிவு செய்திருந்த நிலையில், 6 லட்சத்து 63 ஆயிரத்து 777 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 5 லட்சத்து 13 ஆயிரத்து 955 பேர் மதிப்பெண்களை மேம்படுத்தும் நோக்கில் மீண்டும் தேர்வு எழுதினர். அவர்களில் 3 லட்சத்து 8 ஆயிரத்து 95 பேர்(59.55%) பேர் தங்களது மதிப்பெண்களை உயர்த்தியுள்ளனர்.

இரண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களில் அதிகமான மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு இறுதி முடிவு தயாரிக்கப்படுவதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

summary

The Central Board of Secondary Education (CBSE) has declared the results of the Class X Second Board Examination, 2026.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments