சாய்ஸ் ஃபில்லிங்! மாணவர்கள் செய்யும் முக்கிய தவறு!
பொறியியல் கலந்தாய்வின்போது மாணவர்கள் சாய்ஸ் ஃபில்லிங்கில் செய்யும் தவறுகள் பற்றி..
பொறியியல் சேர்க்கையில் முக்கியமானதே சாய்ஸ் ஃபில்லிங்தான். தற்போது விஐடி நுழைவுத் தேர்வுக்கான ரேங்க் பட்டியல் வெளியாகிவிட்டது. கலந்தாய்வும் அதன் அடிப்படையில் நடைபெறவிருக்கிறது.
பொதுவாக நல்ல ரேங்க் பெற்ற மாணவர்கள் கூட, சாய்ஸ் ஃபில்லிங்கில் கோட்டைவிட்டு விடுகிறார்கள். அதுதான் மிகவும் முக்கியமானது.
ஐந்து வகையான கட்டண முறைகளில் படிப்புகள் வழங்கப்படும். எங்கு படிக்க வேண்டும், என்ன படிப்பு, எந்தக் கட்டணத்தில் படிக்கலாம் என்பதை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும். சிலர் வெறும் 5 சாய்ஸ் ஃபில்லிங் மட்டுமே செய்வார்கள். இது மிகவும் தவறு.
Advertisement
Advertisement
அதாவது, ஒரு மாணவர் குறைந்தது 10 முதல் 20 விருப்பங்களைத் தெரிவு செய்யலாம். ஒரு படிப்பை உதாரணமாக கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை ரூ.2 லட்சம், ரூ.3 லட்சத்தில் என இரண்டு வாய்ப்புகளையும், ஒவ்வொன்றையும் சென்னையில் படிக்கலாம், வேலூர் பல்கலையில் படிக்கலாம் என ஆறு வாய்ப்புகளை வைக்கலாம்.
அடுத்து, இதில் 2 லட்சத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் சென்னை, 2 லட்சத்தில் வேலூர் என அடுத்தடுத்து வைக்க வேண்டியது கல்விக் கட்டணத்தையா அல்லது படிக்க வேண்டிய பல்கலையையா என்பதையும் மாணவர்கள் முடிவு செய்து கொள்ள வேண்டும்.
ஒரு மாணவருக்கு சென்னை பல்கலையில் கம்ப்யூட்டர் சயின்ஸ் ரூ.2 லட்சத்தில் படிக்க வாய்ப்பு இருக்கும் என்றால் அவர் ரூ.4 லட்சத்தில் வேலூரில் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் படிக்க தேர்வு செய்யப்படுவதிலிருந்து தப்பிக்கலாம்.
எனவே, ஒரே படிப்பை அடுத்தடுத்து கட்டணத்தை மாற்றி வாய்ப்பை தெரிவு செய்வதா? ஒரே படிப்பை பல்கலையை மாற்றி தெரிவு செய்வதா என்பதை மாணவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
சிலர் படிப்பை முதலில் வைத்துக் கொள்வார்கள். சிலர் கல்விக் கட்டணத்தை முடிவு செய்து கொண்டு அதற்குள் அனைத்துப் படிப்பையும் வைப்பார்கள். சிலர் சென்னை அல்லது மற்ற பகுதிகளில் உள்ள விஐடி பல்கலையை முதல் தெரிவாக வைத்துக் கொள்வார்கள். எனவே அதில் கவனமாக நிரப்ப வேண்டியதுதான் மிகவும் முக்கியம்.
About the mistakes students make in choice filling during engineering counseling..
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.