முகப்பு
தேர்தல்

இதில் நானே முதல்வன்!

சீமான் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை 22.03 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 4:47 AM
சீமான் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 4:43 AM

வேட்பாளர்கள் வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் https://affidavit.eci.gov.in/ இணையதளத்தில் பொதுமக்களின் பார்வைக்காகப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

வேட்பாளர்கள், அவர்களைச் சார்ந்தோரின் சொத்துகள், கையிருப்பு ரொக்கம், வேட்பாளர்கள் மீதான குற்ற வழக்குகள் போன்ற விவரங்களை உள்ளடக்கிய இந்தப் பத்திரங்களை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து அறிந்துகொள்ளலாம்.

அந்த வகையில், வியாழக்கிழமை (ஏப். 9) மாலை 5.30 மணி நிலவரப்படி, காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை 22.03 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

Advertisement

சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை 1.38 லட்சம் பேரும், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை 2,918 பேரும் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

தவெக தலைவர் விஜய், பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை 3.18 லட்சம் பேரும், திருச்சி கிழக்கு தொகுதியில் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை 30,038 பேரும் பதிவிறக்கம் செய்துள்ளனர். இதன் மொத்த எண்ணிக்கை 3,48,138.

பிரமாண பத்திர பதிவிறக்கத்தில் தவெக தலைவர் விஜய்யே அதிக அளவிலானோரின் கவனத்தை ஈர்த்ததாகக் கருதப்பட்ட நிலையில், அவரைவிட பல லட்சம் பேரின் கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ளார் சீமான்.

-எம்.சங்கர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.