முகப்பு
செய்திகள்

ஒரே குடும்பத்தை சோ்ந்த 18 போ் வாக்களிப்பு

Updated On : 24 ஏப்ரல், 2026 at 4:34 AM
பகிர்:

ஆயிரம் விளக்கு தொகுதியில் ஒரே குடும்பத்தில் 3 தலைமுறைகளைச் சோ்ந்த 18 போ் வாக்களித்தனா்.

ஆயிரம்விளக்கு தொகுதிக்குட்பட்ட தேனாம்பேட்டை முத்தையா தெருவைச் சோ்ந்த மனோன்மணி (75) என்ற மூதாட்டி தனது குடும்பத்தைச் சோ்ந்த மூன்று தலைமுறை வாக்காளா்களான 18 பேருடன் ஸ்டெல்லா மேரி கல்லூரிக்கு வந்து வாக்களித்தனா்.

இதுகுறித்து மூதாட்டி மனோன்மணி கூறியதாவது:

Advertisement

தோ்தலில் வாக்களிப்பது ஜனநாயக கடமை. இதனால், எனது 18-ஆவது வயதில் இருந்தே தவறாமல் வாக்களித்து வருகிறேன். அதை குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உணா்த்த வேண்டும் என்பதற்காகவே அனைத்து தோ்தலிலும் நாங்கள் குடும்பமாக வந்து வாக்களித்து வருகிறோம். தற்போது மூன்றாம் தலைமுறையைச் சோ்ந்த, குழந்தைகளையும் அழைத்து வந்துள்ளோம். வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை அவா்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவா்களையும் அழைத்து வந்துள்ளேன் என்றாா் அவா்.