விண்ணப்பித்துவிட்டீர்களா..? பொறியியல் பட்டதாரிகளுக்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள்!
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் (பிஎஸ்என்எல்) நிரப்பப்பட உள்ள 300 மேலாண்மை டிரெய்னி
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் (பிஎஸ்என்எல்) நிரப்பப்பட உள்ள 300 மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Management Trainee (MT) (Telecom Operations)
மொத்த காலியிடங்கள்: 300. இதில் வெளித்தேர்வர்கள் 150 பணியிடங்களுக்கு மட்டும் தேர்வு நடைபெறும்.
Advertisement
Advertisement
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500
வயதுவரம்பு: 01.08.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தகுதி: பொறியியல் துறையில் டெலிகம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ், கணினி, ஐடி, எலக்ட்ரிக்கல் போன்ற பிரிவுகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்து எம்.டெக், எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் Assessment Process தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
On-line Assessment Process தேர்வு நடைபெறும் தேதி: 17.03.2019
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.2,200. மற்ற பிரிவினருக்கு ரூ.1100 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.bsnl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bsnl.co.in/opencms/bsnl/BSNL/about_us/pdf/MT_EXT_NOTIFICATION_111218.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.01.2019
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.