பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 212 காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு
இந்திய ராணுவத்தின் கீழ் செயல்படும் பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 212 காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: BDL/C-HR (JA & CP)/2025-3
பணி: Trainee Engineer
Advertisement
Advertisement
சம்பளம்: மாதம் ரூ.29,500 - 38,500
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், கணினி அறிவியல் போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: Trainee Officer (Marketing)
தகுதி: எம்பிஏ சந்தையியல் பிரிவில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Trainee Office (HR)
தகுதி : MSW, HR, Industrial Relations பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Trainee Officer (Finance)
தகுதி: MBA Finance, CA, CMA போன்ற ஏதாவதொரு படிப்பை முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மேற்கண்ட பணிகளுக்கு மாதம் ரூ. 29,500 - 38,500
பணி: Trainee Diploma Assistant
சம்பளம்: மாதம் ரூ. 24,500 - 29,000
தகுதி: பொறியியல் துறையில் பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், கணினி அறிவியல் போன்ற ஏதாவதொரு பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Trainee
சம்பளம்: மாதம் ரூ.24,500 - .29,000
தகுதி: Assistant (Finance, HR), Commerce, Business Administration, HR, Social Science, Social Welfare போன்ற பாடப் பிரிவுகள் ஏதாவதொன்றில் இளநிலைப்பட்டம் அல்லது சிஏ, ஐசிடபுள்யுஏ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் 10.8.2025 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு சலுகை வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வில் விண்ணப்பதாரரின் பணி அனுபவம் மற்றும் இதர திறமைகள் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும். அனைத்து விண்ணப்பதாரர்களும் குறைந்தபட்சம் ஒரு ஆண்டாவது பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் நடைபெறும். தேர்வுகள் குறித்து விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300 மட்டும். கட்டணத்தை ஆன்லைனில் எஸ்பிஐ வங்கி e-Payment Challan-ஐ பயன்படுத்தி செலுத்தவும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: www.bdl-india.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.8.2025
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 24.8.2025 (தோராயமாக)
தேர்விற்கான அனுமதி சீட்டை 18.8.2025-க்கு பிறகு இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளலாம் .
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Applications are invited form eligible Indian Nationals for filling-up the following positions on contract (temporary) basis
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.