முகப்பு
வேலைவாய்ப்பு

1, 979 ஆசிரியர், அறிவியல் உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தில்லி அரசில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,979 ஆசிரியர் மற்றும் அறிவியல் உதவியாளர் பணி தேர்வுக்கான அறிவிப்பு குறித்து...

Updated On : 20 ஜூன் 2026, 8:01 am IST
1, 979 ஆசிரியர், அறிவியல் உதவியாளர் பணி - DSSSB
பகிர்:

தில்லி அரசின் பல்வேறு துறைகளுக்குத் தகுதியான பணியாளர்களைத் தேர்வு செய்யும் தில்லி துணைநிலைச் சேவைகள் தேர்வு வாரியம், தில்லி அரசில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,979 ஆசிரியர் மற்றும் அறிவியல் உதவியாளர் பணி தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்த விவரங்கள் வருமாறு:

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 03/2026

Advertisement

Advertisement

மொத்த காலியிடங்கள்: 1979

பணி: Junior Scientific Assistant

தகுதி: உயிரியல், இயற்பியல், கணிதம், பயன்பாட்டுக் கணிதம், தடய அறிவியல், உளவியல், குற்றவியல், வேதியியல், நச்சுயியல், உயிர்வேதியியல்(Biology,Physics,Maths, Applied Mathematics,Forensic Science, Psychology, Criminology, Chemistry, Toxicology,Biochemistry) ஆகிய ஏதாவதொரு துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technical Assistant (Hindi)

தகுதி: இந்தி மற்றும் ஆங்கில பாடங்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Archivisit G-1

தகுதி: வரலாறு பிரிவில் எம்.ஏ முடித்திருப்பதுடன் காப்பக மற்றும் ஆவண மேலாண்மை படிப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: I.T. Assistant

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கணினியில் 1 மணி நேரத்திற்கு 8000 எழுத்துக்களை தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Fitter,Lift Operator, A/C Mechanic

தகுதி: சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பணி: Sub- Station Apprentice

தகுதி: ஏதாவதொரு டிரேடில் இரண்டு வருட ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பணி: Data Processing Assistant,DTO

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம், டிப்ளமோ படிப்புடன் 1 மணி நேரத்தில் 8000 எழுத்துக்களை தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Trained Graduate Teacher

தகுதி: அறிவியல், கணினி அறிவியல், சிறப்புக் கல்வி போன்ற ஏதாவதொரு பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் பி.எட் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 29,200 - 92,300

தேர்வு செய்யப்படும் முறை: தில்லி துணைநிலைச் சேவைகள் தேர்வு வாரியத்தால் (டிஎஸ்எஸ்எஸ்பி) நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத்தேர்வில் பொது அறிவு, பொது ஆங்கிலம் மற்றும் கணித நுண்ணறிவு தொடர்பான கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத் தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி, இடம் குறித்த விபரம் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.dsssbonline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 15.7.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

summary

Delhi Subordinate Services Selection Board (DSSSB) invites online applications from eligible candidates for recruitment to the posts in respect of under mentioned Departments of Government of NCT of Delhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments