முகப்பு
ஆன்மிகம்

பழமுதிர்சோலை முருகன் கோயில் கும்பாபிஷேகம் - புகைப்படங்கள்

Updated On : 5 ஜூலை 2026, 8:17 pm IST
மதுரை அழகர்மலை உச்சியில் அமைந்துள்ள ஆறுபடை வீடுகளில் ஆறாவது படைவீடான அருள்மிகு பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவிலின் மகா கும்பாபிஷேக விழா, இன்று ஜூலை 5 காலை 5:45 மணி முதல் 6:30 மணிக்குள் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பகிர்:
முருகப்பெருமானின் ஆறாவது படைவீடாக போற்றப்படும் மதுரை பழமுதிர்சோலை முருகன் கோவியில் இன்று மகா கும்பாபிஷேக விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
அதிகாலை 5. 30 மணிக்கு மேல் 6. 30 மணிக்குள் மூலவரான வள்ளி, தெய்வானை உடனுறை சோலைமலை முருகன் கோயில் விமானத்துக்கு குடமுழுக்கு நடைபெற்ற பிறகு, ராஜ கோபுரம் உள்ளிட்ட பரிவார மூா்த்திகளின் விமானங்களுக்கும் குடமுழுக்கு நடைபெற்றது.
சிவாச்சார்யார்கள் மந்திரங்கள் ஓத ராஜகோபுரங்களுக்கு திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்று தீபாராதனைகள் காட்டப்பட்டது.

Advertisement

Advertisement

ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டனர்.
ட்ரோன்கள் மூலம் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டன.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்ட, முருகனின் 6 வது படைவீடான பழமுதிர்சோலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா, வேத மந்திரங்கள் முழுங்க, ராஜகோபுர கலசங்களுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டது.
ராஜகோபுரங்களுக்கு திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்று தீபாராதனைகள் காட்டப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments