அருள்மிகு பங்கஜ வல்லி தாயார் சமேத புண்டரீகாஷப் பெருமாள் திருக்கோயில் பிரம்மோத்ஸவம் - புகைப்படங்கள்
பிரசித்தி பெற்ற திருவெள்ளறை ஸ்ரீ பங்கஜ வல்லி தாயார் சமேத புண்டரீகாஷப் பெருமாள் திருக்கோயிலில் பிரம்மோத்ஸவம் துவஜாரோஹணம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
புண்யாவாஹனம் மற்றும் பூஜைகளுக்கு பிறகு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
திருவெள்ளறை கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு பங்கஜ வல்லி தாயார் சமேத புண்டரீகாஷப் பெருமாள் திருக்கோயிலில் நடைபெறும் பிரம்மோத்ஸவம்.
108 திவ்ய தேஷங்களில் 6 வது திவ்ய திருத்தலமாக விளங்குகிறது.
இந்த ஸ்தலமானது ஸ்வேதகிரி என்று அழைக்கப்படுகிறது.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உப கோயிலான இத்திருக்கோயிலில் ப்ரமோத்ஸவம் தேர்த் திருவிழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த திருத்தலம் ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலை விட மிகவும் பழமையானது. அதனால் ஆதிவெள்ளறை என்றும் அழைக்கப்படுகிறது.
திருப்பதி லட்டு, கூட்டாஞ்சோறும், கஷாயம் போன்று வித்தியாசமான பிரசாதங்களால் புகழ்பெற்றது இந்த கோயில்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.