முகப்பு
அரை நூற்றாண்டுக்கு முன்

3.5.1976: சென்னையில் அனல் காற்று: உஷ்ண நிலை 110 டிகிரியானது

சென்னை நகரில் ஞாயிறன்று உஷ்ண நிலை 110 டிகிரியாக உயர்ந்தது.

3.5.1976 - Dinamani
பகிர்:

சென்னை, மே. 2 - சென்னை நகரில் ஞாயிறன்று உஷ்ண நிலை 110 டிகிரியாக உயர்ந்தது. நாள் முழுதும் அனல் வீசிக் கொண்டே காற்று இருந்தது.

இத்தகைய கடும் உஷ்ணநிலை மேலும் ஓரிரு நாட்களுக்கு நீடிக்கக் கூடும் என்று, சென்னை வானிலை ஆய்வு நிலையம் அறிவித்தது.

தார் உருகியது

Advertisement

Advertisement

சென்னை நகரில் பகலில் பல தெருக்கள் ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடந்தன. சில சாலைகளில் தார் உருகிக் கிடந்தது.

பன்னிரண்டு ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு 109 டிகிரி கடும் உஷ்ணம் சனிக்கிழமை யன்று வாட்டி வதைத்தது. ஞாயிறன்று இது 109.9 டிகிரியாக (சுமார் 110 டிகிரி) உயர்ந்தது.

சமீப நாட்களாக இல்லாத அளவுக்கு அனல் காற்றும், நகர மக்களை வறுத்து எடுத்தது. பஸ்களில் பயணம் செய்யும் போது, பஸ் வேகமும் சேர்ந்து, இந்த காற்று உடலெல்லாம் "சுரீர்" என்று தாக்கியது. மாலையில் கடற்காற்று வீசத்தொடங்கியதும் தான் சற்று நிம்மதி பிறந்தது. ...

சர்க்கஸ் தீவிபத்தில் தப்பி ஓடிய யானை அட்டகாசம்

பம்பாய், மே. 2- பம்பாயில் செம்பூரில் நடந்து வரும் சர்க்கஸின் பெரிய கூடாரம் தீப்பற்றி முற்றிலும் நாசமாகியது. இன்று 3 மணிக்கு காட்சி துவங்குவதாக இருந்த நேரத்தில் இத் தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்தில் கூடாரம் சாம்பலானதோடு, கனத்த நைலான் கயிறுகள் உருகின. தீ மரக்கட்டு மானங்களுக்கும் பரவியபோது சர்க்கஸ் சிப்பந்திகளும், காட்சியில் பங்கு கொள்ளத் தயாராகிக் கொண்டிருந்த சர்க்கஸ் கலைஞர்களும் தீயைக் கட்டுப்படுத்தப் பாடுபட்டனர்.

தீ விபத்தினால் ஏற்பட்ட குழப்பத்தில் சர்க்கஸ் கம்பெனியைச் சேர்ந்த ஒரு யானை அங்கிருந்து தப்பி ஓடியது. கிழக்கு எக்ஸ்பிரஸ் சாலையில் ஓடிய அந்த யானை சாலையில் சென்றவர்களையும், காரோட்டிகளையும் பய முறுத்தியபடி சென்றது. யானை காரணமாக விபத்துகள் எதுவும் ஏற்பட்டு விடாதபடி யானையைத் தடுப்பதற்காகப் பெரும் கூட்டம் அதன் பின்னால் சென்றது.

விபத்துக்குள்ளான சர்க்கஸ் கூடாரத்திலிருந்து சுமார் கால் கிலோ மீட்டர் தூரத்தில் அந்த யானை போக்குவரத்து நெரிசலில் சிக்கியபிறகு, அங்கிருந்து மீண்டு சாலை ஓரத்தில் இறங்கி அங்கு சாக்கடையில் படுத்துக் கொண்டது. அருகிலுள்ள சித்தார்த்தா காலனிவாசிகள் வாளிவாளியாகத் தண்ணீரைக் கொண்டு வந்து யானை மீது ஊற்றினர். சர்க்காஸ்காரர்கள் வரும் வரையில் யானை சேற்றில் சிக்கியிருப்பது நல்லது என்று கருதி அவர்கள் அவ்விதம் செய்தனர்.

ஒருமணி நேரத்துக்குப் பிறகு மாவுத்தன் வந்து அந்த யானையை அங்கிருந்து அழைத்துச்சென்றார். ...

summary

Heatwave in Chennai: Temperatures Hit 110 Degrees

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments