முகப்பு
மருத்துவம்

சொத்தைப் பல்லை எடுத்த பிறகு...

தொல்லை தந்த பல்லைப் பிடுங்கிய அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா?அப்படி இருந்தால் உங்கள் மருத்துவர் உங்களுக்கு ஒரு பஞ்சு கற்றையைக் கொடுத்து  ஒன்றரை மணி நேரம் பல் பிடுங்கிய இடத்தில் வைத்துக் கொள்ளச் சொன்னது

Updated On : 20 செப்டம்பர் 2012, 5:34 pm IST
பகிர்:

தொ ல்லை தந்த பல்லைப் பிடுங்கிய அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா?அப்படி இருந்தால் உங்கள் மருத்துவர் உங்களுக்கு ஒரு பஞ்சு கற்றையைக் கொடுத்து  ஒன்றரை மணி நேரம் பல் பிடுங்கிய இடத்தில் வைத்துக் கொள்ளச் சொன்னது தெரிந்திருக்கும்.  ஏனென்றால் ரத்தம் உறைந்தால்தான் காயம் குணமாகும்; புது எலும்பு உருவாகும். ரத்தம் உறைவது நிற்காவிட்டால் மற்றுமொரு பஞ்சு கற்றையை இன்னும் ஒரு முறை அரை மணி நேரத்துக்கு முயற்சி செய்யலாம்.

 முகம், தாடை, கன்னத்தில் மீது ஐஸ் கட்டிகளை வைத்து குளிரச் செய்வது, ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் அருந்துவதுகூட ரத்தம் உறைவதற்காகத்தான். ரத்தம் உறைந்த பின்னரும் அடுத்த 24 மணி நேரத்துக்குக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டியவை

பின்வருமாறு:

Advertisement

Advertisement

 புகை பிடிப்பது, புகையிலை மெல்லுவது, மது அருந்துவது, குழல் (நற்ழ்ஹஜ்) வைத்து உறிஞ்சுவது, தீவிரமாக வாய் கொப்பளிப்பது, பல் பிடுங்கிய இடத்தை நாக்காலோ, விரலாலோ தொடுவது கூடாது. மாறாக, நிறைய திரவ உணவை, மிருதுவான, சத்துள்ள உணவை சூடான, மசாலா மிகுந்த உணவைத் தவிர்ப்பது நல்லது. உணவுக்குப் பின் உணவுத் துணுக்குகள் பல் பிடுங்கிய இடத்தில் இல்லாமல் இருக்க இதமாக கொப்பளிக்க

வேண்டும்.

 24 மணி நேரத்துக்குப் பின் இயல்பான நிலைக்கு நீங்கள் வந்து விடுவீர்கள். இயல்பான நிலை திரும்பாமல், ரத்தக் கசிவு அல்லது தீவிர வலி அல்லது தொடர்ந்த வீக்கம் இருந்தால்  உடனே உங்கள் பல் மருத்துவரை அணுகுங்கள்.

டாக்டர் ஏ.வி. அருண்,

தி ஸ்மைல் சென்ட்டர்,

ஏ 29/1, 2}வது பிரதான சாலை, வேல்டு ஆப் டைட்டன்னுக்கு பின்புறம்

அண்ணாநகர் (கிழக்கு), சென்னை }600102. தொ.பே.: 26203921 / 42170421.

மொபைல்: 9884042526. இ-மெயில்:
thesmile centre @y ahoo.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments