இன்றைய மருத்துவ சிந்தனை பண்ணைக் கீரை
பண்ணைக் கீரையுடன் சிறிது சீரகம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் சொட்டு
பண்ணைக் கீரையுடன் சிறிது சீரகம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் சொட்டுச் சொட்டாக சிறுநீர் வெளியேறுவது (சிறுநீர் ஒழுக்கு) நிற்கும்.
பண்ணைக் கீரையைச் சாறு எடுத்து அதனுடன் நாவல் பருப்பைச் அரைத்துச் சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் உடனே குணமாகும்.
பண்ணைக் கீரைச் சாற்றில் அதிமதுரத் தூளைக் கலந்து சாப்பிட்டு வந்தால், எப்படிப்பட்ட இருமலும் குணமாகும்.
Advertisement
Advertisement
மாதவிலக்கின் போது ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும் போது, பண்ணைக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் அதிகப்படியான ரத்தப்போக்கு கட்டுப்படும்.
பண்ணைக் கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால், ஜீரண மண்டல உறுப்புகள் அனைத்தும் பலம் பெறும்.
பண்ணைக் கீரையை அரைத்துச் சாறு எடுத்து, புண்கள் மீது தடவி வந்தால் அவை விரைவில் குணமாகும்.
பண்ணைக் கீரையை பருப்பு சேர்த்துக் கடைந்து சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட மலச்சிக்கல் தீரும்.
KOVAI HERBAL CARE
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்
Foot and Hand Reflexologist
Cell : 96557 58609
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.