பசியின்மை, வயிற்று வலி மற்றும் வாயுக் கோளாறுகளை நீக்கி ஜீரண சக்தியை சீராக்கும் பொடி
புதினா இலையை நன்கு ஆய்ந்து உலர்த்தி எடுத்துக் கொண்டு அதனுடன் மேற்கூறிய பொருட்களை எல்லாம் சேர்த்து ஒன்றாக்கி தூளாக்கி வைத்துக் கொள்ளவும்.
புதினா பொடி
தேவையான பொருட்கள்
புதினா இலை (உலர்ந்தது) - 150 கிராம்
மிளகு - 15 கிராம்
சீரகம் - 15 கிராம்
சோம்பு - 15 கிராம்
மஞ்சள் - 10 கிராம்
செய்முறை : புதினா இலையை நன்கு ஆய்ந்து உலர்த்தி எடுத்துக் கொண்டு அதனுடன் மேற்கூறிய பொருட்களை எல்லாம் சேர்த்து ஒன்றாக்கி தூளாக்கி வைத்துக் கொள்ளவும்.
Advertisement
Advertisement
பயன்கள் : இந்த பொடியை தினமும் காலை மாலை என இருவேளையும் தலா ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் பசியின்மை, ருசியின்மை, வயிற்று வலி மற்றும் வாயுக் கோளாறுகளை சீராக்கி ஜீரண சக்தியை முறைப்படுத்தும்.
இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.