பிரான்சு கம்பன் கழகம் சார்பில் பொங்கல் விழா இலக்குவனார் நூற்றாண்டு விழா
பிரான்சு கம்பன் கழகம் சார்பில் தமிழர் புத்தாண்டுப் பொங்கல் விழா மற்றும் செந்தமிழ்க் காவலர் சி.இலக்குவனார் நூற்றாண்டு விழா பிப்.14ம்தேதி வெகு சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. பேராசிரியர் பா.தசரத
பிரான்சு கம்பன் கழகம் சார்பில் தமிழர் புத்தாண்டுப் பொங்கல் விழா மற்றும் செந்தமிழ்க் காவலர் சி.இலக்குவனார் நூற்றாண்டு விழா பிப்.14ம்தேதி வெகு சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.
பேராசிரியர் பா.தசரதன் தலைமையில் நடைபெறும் விழாவில் வரவேற்புரையை செவாலியே சிமோன் யூபர்ட் நிகழ்த்த முன்னிலையை கவிமணி விசயரத்தினமும், செந்தமிழ்க் காவலர் என்ற தலைப்பில் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ சிறப்புரை நிகழ்த்தவும் பொங்கல் கவியுரையை கவிச்சித்தர் கண.கபிலனார் வழங்கவும் இலக்குவனார் நூற்றாண்டு விழா மலரை கி.அசோகன் வெளியிட சிவப்பிரகாசம், இலங்கை வேந்தன்,ஆதி ஞானவேல், குமார் அமல்ராசு,முசாவீத் முகமத், செயசீலன் ஆகியோர் பெற்றுக்கொள்ள விருக்கின்றனர். மாணவ மாணவியருக்கு ஓவியப் போட்டியும், மாதர்களுக்கு கோலப்போட்டியும் நடை
பெறவுள்ளது.
Advertisement
Advertisement
தொடர்ந்து பொங்கல் கவிமலர் அரங்கத்தை சிமோன் இராசேசுவரி,லினோதினி
சண்முகநாதன்,சரோசா தேவராசு,பூங்குழலி பெருமாள்,அருணா செல்வம்,பாரீசு
பார்த்தசாரதி,பாமல்லன்,தேவராசு ஆகியோர் சிறப்பிக்கவுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து தமிழர், தமிழ்ப் பண்பாட்டை வளர்க்கின்றார்களா? குலைக்கின்றார் களா? என்ற பட்டிமன்றத்துக்கு கவிஞர் கி.பாரதிதாசன் நடுவராகவும் வளர்க்கின்றார்கள்என்ற அணி சார்பில் சிமோன் இராசேசுவரி,சரோசா தேவராசு,எலிசபெத் அமல்ராசு ஆகியோரும்,குலைக்கின்றார்கள் என்ற அணியின் சார்பில் லெபோ லூசியா, ஆதிலட்சுமி வேணுகோபால்,மற்றும் பூங்குழலி பெருமாள் ஆகியோர் வாதிட நடுவரின் நிறைவுரைக்குப் பின்தணிகா சமரசம் நன்றியுரை நிகழ்த்துகிறார். விழாவில் கலந்துகொள்ள தமிழார்வலரகள்அனைவரையும் கம்பன் கழகத்தின் சார்பில் பேரா.பெஞ்சமின் லெபோ அழைக்கிறார்.