முகப்பு
இந்தியா

மருத்துவமனையில் செளதாலா

ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஹரியாணா மாநில முன்னாள் முதல்வர் செளதாலா

Updated On : 2 ஏப்ரல் 2013, 1:02 am IST
பகிர்:

ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஹரியாணா மாநில முன்னாள் முதல்வர் செளதாலா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த 2000-ம் ஆண்டில் 3206 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரை அடுத்து சிபிஐ விசாரணை மேற்கொண்டது. இவ்வழக்கை கடந்த ஜனவரி மாதம் விசாரித்த தில்லி நீதிமன்றம், முன்னாள் முதல்வர் ஓ.பி.செளதாலா, அவரது மகன்கள் அஜய், அபய் ஆகியோருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதன்படி அனைவரும் திகார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நீதிபதி மனுராய் சேத்தி முன்னிலையில் நடைபெற்றது.

Advertisement

Advertisement

இதுதொடர்பாக ஓம்பிரகாஷ் செளதாலா ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. அவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என அவரது வழக்குரைஞர் தெரிவித்தார்.

 இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி சேத்தி, மருத்துவமனையில் செளதாலா சேர்க்கப்பட்டது குறித்து ஏன் தெரிவிக்கவில்லை என தனது கண்டனத்தை தெரிவித்தார். மேலும் செüதாலாவின் உடல்நிலை குறித்த அறிக்கையை திகார் சிறைக்கண்காணிப்பாளர் உடனே தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

இதையடுத்து வரும் 12-ம் தேதி மீண்டும் செüதாலாவை ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.