முகப்பு
இந்தியா

அமைச்சர் மொய்லி விலக வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

தேச நலனுக்கு விரோதமாக செயல்படும் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி பதவி விலக வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Updated On : 22 ஜூன், 2013 at 12:58 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:13 PM

தேச நலனுக்கு விரோதமாக செயல்படும் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி பதவி விலக வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் மத்திய தலைமைக் குழு தில்லியில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

எரிவாயு விலையை உயர்த்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளதன் மூலம் பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, தேச நலனுக்கு விரோதமாகவும், பெரும் தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு

Advertisement

வருகிறார்.

எனவே அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும். மேலும் இந்த விவகாரம் குறித்து உயர் நிலை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைப்பது ஏற்கத்தக்கது.

ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஆதரவாக மொய்லி செயல்பட்டு வருகிறார் என்பதை கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ்தாஸ் குப்தா ஏற்கெனவே அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் வெளிப்படுத்தியுள்ளார்.

ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெறும் எரிவாயுவுக்கு கொடுக்க வேண்டிய விலை குறித்து ரங்கராஜன் குழு மற்றும் தனது அமைச்சக அதிகாரிகள் கூறியதைவிட அதிகம் கொடுக்க வேண்டுமென்று மொய்லி தனிப்பட்ட முறையில் பரிந்துரைத்துள்ளார் என்று அந்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

எரிவாயு விலையை 60 சதவீதம் அதிகரிக்க வேண்டுமென்ற பரிந்துரை தொடர்பாக முடிவெடுப்பதை பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர்கள் குழு ஒத்திவைத்துள்ள சூழ்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.