காங்கிரஸ் கோஷ்டி மோதலின்போது துப்பாக்கியால் சுட்ட பாதுகாவலர்
ஜார்க்கண்ட்டில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சித் தலைவரின் பாதுகாவலர் தனது துப்பாக்கியால் விண்ணை நோக்கி சுட்டுள்ளார்.
ஜார்க்கண்ட்டில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சித் தலைவரின் பாதுகாவலர் தனது துப்பாக்கியால் விண்ணை நோக்கி சுட்டுள்ளார்.
போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக பி.கே.ஹரிபிரசாத் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ராஞ்சியில் உள்ள காங்கிரஸ் பவனுக்கு வெள்ளிக்கிழமை வந்தார்.
Advertisement
Advertisement
அப்போது அங்கிருந்த மற்றொரு பிரிவினருடன் ஹரிபிரசாத் ஆதரவாளர்கள் தகராறில் ஈடுபட்டனர். வாய்த்தகராறு முற்றி மோதல் ஏற்பட்டது. இதற்கிடையில் காங்கிரஸ் கட்சித் தலைவரின் பாதுகாவலர் தனது துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டுள்ளார்.
இது குறித்து போலீஸ் அதிகாரி மனோஜ் ரத்தன் கூறுகையில், "இச்சம்பவம் குறித்து 24 மணி நேரத்துக்குள் அறிக்கை அளிக்குமாறு மாநில காங்கிரஸ் தலைவர் சுக்தோ பகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன். அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின், கலவரத்துக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.