முகப்பு
இந்தியா

மாநில மறுசீரமைப்பு குழு அமைக்கப்பட மாட்டாது: ஷிண்டே

மாநிலங்களைப் பிரிப்பது தொடர்பாக மறுசீரமைப்பு குழு அமைக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே, தனி மாநில கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசு பரிசீலிக்கத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Updated On : 1 ஆகஸ்ட், 2013 at 10:46 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:16 PM

மாநிலங்களைப் பிரிப்பது தொடர்பாக மறுசீரமைப்பு குழு அமைக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே, தனி மாநில கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசு பரிசீலிக்கத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "தனி மாநிலங்கள் கேட்டுப் போராட உரிமை உண்டு. அதேநேரம் வன்முறையில் ஈடுபடக்கூடாது. இக் கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசு பரிசீலிக்கும். வடகிழக்கு பகுதிகளில் இருந்து 6 மாநிலங்களை புதிதாக உருவாக்கவும், உத்தரப் பிரதேசத்தை நான்காக பிரிக்கவும், மேற்கு வங்கத்தை பிரிக்கவும், மற்ற மாநிலங்களில் இருந்து மூன்று மாநிலங்கள் வரை புதிதாக உருவாக்க கோரிக்கைகள் வந்துள்ளன. இந்தக் கோரிக்கைகள் கண்டிப்பாக பரிசீலிக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.