முகப்பு
இந்தியா

கேதார்நாத்: 86 நாள்களுக்கு பிறகு பூஜைகள் தொடக்கம்

கேதார்நாத் கோயிலில் இயற்கை பேரழிவால் தடைபட்ட பூஜைகள், 86 நாள்களுக்கு பிறகு புதன்கிழமை மீண்டும் தொடங்கின.

Updated On : 11 செப்டம்பர் 2013, 11:01 pm IST
பகிர்:

கேதார்நாத் கோயிலில் இயற்கை பேரழிவால் தடைபட்ட பூஜைகள், 86 நாள்களுக்கு பிறகு புதன்கிழமை மீண்டும் தொடங்கின.

கேதார்நாத் கோயிலில், மழை, வெள்ளம் காரணமாக கடந்த ஜுன் 16-ஆம் தேதியிலிருந்து பூஜைகள் தடைபட்டன. பூஜைகளை மீண்டும் தொடங்க மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதையடுத்து புதன்கிழமை காலை 7 மணிக்கு, தலைமை குருக்கள் ராவல் பீமா சங்கர லிங்க சிவாச்சாரியார், கோயிலின் பிரதான வாயிலை திறக்க, பூஜைகள் தொடங்கின.

தலைமை குருக்களுடன் நூற்றுக்கணக்கான புரோகிதர்கள் மற்றும் பத்ரிநாத் கேதார்நாத் கமிட்டி அதிகாரிகளும் பூஜையில் கலந்து கொண்டனர். தினமும் நடைபெற்று வந்த பூஜை நீண்ட நாள்கள் தடைபட்டதற்காக பரிகார பூஜையும் நடைபெற்றது.

Advertisement

Advertisement

இந்நிகழ்ச்சியில், உத்தரகண்ட் முதல்வர் விஜய் பகுகுணா பங்கேற்பதாக இருந்தது. ஆனால், மோசமான வானிலை காரணமாக அவரால், டேராடூனில் இருந்து கேதார்நாத் கோயிலுக்கு செல்ல முடியவில்லை. கேதார் பள்ளத்தாக்கில் நிலவிய கடும் பனிமூட்டத்தால், பூஜை நிகழ்ச்சிகளை ஊடகங்களால் ஒளிபரப்ப இயலவில்லை.

பூஜையில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. கோயிலுக்குள் மீண்டும் யாத்ரிகர்களை அனுமதிப்பது குறித்து இந்த மாதம் 30-ஆம் தேதி நடைபெறவுள்ள கோயில் நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.