'இரக்கமின்றி கொல்ல வேண்டும்' விடியோ பதிவுக்கு குமாரசாமி விளக்கம்
தனது கட்சியின் மூத்த தலைவரை கொலை செய்தவர்களை இரக்கமின்றி கொல்ல வேண்டும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தனது கட்சியின் மூத்த தலைவரை கொலை செய்தவர்களை இரக்கமின்றி கொல்ல வேண்டும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் ஆளும் மஜத கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் என்பவர் தனது காரில் மட்டூர் செல்லும் வழியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அக்கட்சித் தலைவரும், கர்நாடக முதல்வருமான குமாரசாமி பேசிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், பிரகாஷ் நல்ல மனிதர். அவரை எதற்காக கொலை செய்தார்கள் எனத் தெரியவில்லை. அவர்களைக் கண்டுபிடித்து இரக்கமின்றி சுட்டுத்தள்ள வேண்டும். இதனால் எந்தப் பிரச்னையும் கிடையாது என்று தொலைபேசியில் பேசியிருந்தார்.
Advertisement
Advertisement
இதுகுறித்து குமாரசாமி அளித்த விளக்கத்தில் தெரிவித்ததாவது, அந்த நேரத்தில் உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன். அவர்களை இரக்கமின்றி கொல்ல வேண்டும் என்பது எனது உத்தரவு அல்ல. அவர்கள் ஏற்கனவே இரு கொலைகளில் சம்பந்தப்பட்டு சிறையில் இருந்துள்ளனர். பிணையில் வெளிவந்த இரண்டு தினங்களில் தற்போது மீண்டும் ஒருவரை கொலை செய்துள்ளனர். இதுபோன்று பிணையை அவர்கள் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.