முகப்பு
இந்தியா

உத்தரகண்ட் பெருவெள்ளம்: 2013ஆம் ஆண்டில் இறந்ததாக முடிவு செய்யப்பட்ட இளம்பெண் உயிருடன் வந்தார்

உத்தரகண்ட் மாநிலம், கேதர்நாத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு நேரிட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்து விட்டதாக முடிவு செய்யப்பட்ட இளம்பெண், மீண்டும் உயிருடன் திரும்பியுள்ளார்.

Updated On : 26 டிசம்பர் 2018, 12:58 am IST
பகிர்:


உத்தரகண்ட் மாநிலம், கேதர்நாத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு நேரிட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்து விட்டதாக முடிவு செய்யப்பட்ட இளம்பெண், மீண்டும் உயிருடன் திரும்பியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், அலிகார் அருகே உள்ள பனாதேவி பகுதியைச் சேர்ந்தவர் சான்சால். மனநிலை பாதிக்கப்பட்ட அந்தப் பெண், 12 வயதில் தனது தந்தை ராஜேஷ், தாயார் ஆகியோருடன் கேதர்நாத்துக்கு கடந்த 2013ஆம் ஆண்டில் புனித யாத்திரை சென்றிருந்தார். அப்போது அங்கு நேரிட்ட பெருவெள்ளத்தில் ஏராளமானோர் பலியாகினர். இந்த சம்பவத்தில் சான்சாலின் தந்தை ராஜேஷ் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டு பலியானார். அவரது தாயார் நீண்ட போராட்டத்துக்கு பிறகு, உத்தரப் பிரதேசத்துக்கு திரும்பினார். சான்சாலை காணவில்லை. இதனால் அவர் உயிரிழந்திருக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், சான்சாலை மீட்டு சிலர், ஜம்முவில் உள்ள காப்பகத்தில் சேர்த்துள்ளனர். அங்கிருந்தோரிடம் அலிகார் நகரம் குறித்து சான்சால் சைகை மூலம் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, அலிகாரில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர் சஞ்சீவ் ராஜாவை தொடர்பு கொண்டு, காப்பக நிர்வாகிகள் தகவல் கொடுத்தனர்.
பின்னர் போலீஸார் உதவியுடன், பனாதேவியிலிருக்கும் சான்சாலின் தாயார், தாத்தா, பாட்டி கண்டுபிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, குடும்பத்தினருடன் சான்சால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 
சேர்ந்தார்.
இருப்பினும், தனது 12 வயதில் பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த தந்தை ராஜேஷ் குறித்த நினைவுகள், சான்சாலுக்கு இன்னமும் உள்ளது. அவரை நினைத்து சான்சால் மனமுருகி வேதனைப்படுவது உறவினர்களுக்கு கவலையை அளித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments