பஞ்சாப்பில் ராஜீவ் சிலை சேதம்: சீக்கிய கலவரத்துக்கு பாஜக, ஆர்எஸ்எஸ் மீது அமரீந்தர் சிங் தாக்கு
பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவில் அமைந்துள்ள மறைந்த பிரதமர் ராஜீவ் சிலையை மர்ம நபர்கள் செவ்வாய்கிழமை சேதப்படுத்தினர்.
பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவில் அமைந்துள்ள மறைந்த பிரதமர் ராஜீவ் சிலையை மர்ம நபர்கள் செவ்வாய்கிழமை சேதப்படுத்தினர். இதுதொடர்பாக 2 மீது வழக்குப்பதிவு செய்த பஞ்சாப் போலீஸார் ஒருவரை கைது செய்தனர்.
இந்நிலையில், பஞ்சாப் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அமரீந்தர் சிங் கூறுகையில்,
இந்த செயலுக்கு சிரோமி அகாலிதளம் தான் காரணம். அவர்களின் இந்த கீழ்த்தரமான செயலுக்காக அக்கட்சித் தலைவர் சுக்பீர் சிங் பாதல் மன்னிப்பு கேட்க வேண்டும். இதுபோன்ற செயல்களால் வாக்கு வங்கியை பலப்படுத்துவதாக நினைத்து அதை இழக்க வேண்டாம் எனவும் அவருக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
Advertisement
Advertisement
1984-ல் நடைபெற்ற சீக்கிய கலவரத்துக்கும் நேரு குடும்பத்துக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. அவர்களுக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக இதில் வேண்டுமென்றே நேரு குடும்பத்தினரை தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால், உண்மையில் பாஜக, ஆர்எஸ்எஸ் தான் சீக்கிய கலவரத்துக்கு முக்கிய காரணம் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.