மத்திய நிறுவனங்களை அரசு தவறாக பயன்படுத்துகிறது
மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை போன்ற நிறுவனங்களை, தவறாகப் பயன்படுத்தி வருவதாக காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா மத்திய அரசின் மீது திங்கள்கிழமை குற்றம் சாட்டினார்.
மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை போன்ற நிறுவனங்களை, தவறாகப் பயன்படுத்தி வருவதாக காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா மத்திய அரசின் மீது திங்கள்கிழமை குற்றம் சாட்டினார்.
மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது சர்மா பேசியதாவது:
ஒரே குற்றத்திற்காக, ஒன்றுக்கு மேற்பட்ட தகவல் அறிக்கைகளை மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை போன்ற மத்திய நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. நடுநிலை நிறுவனங்களான இவை தற்போது மத்திய அரசின் நிர்பந்தத்தால் இயங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
இந்நிறுவனங்கள், விசாரணையை முழுமையாக, நேர்மையாக மேற்கொள்ளாமல், ஒரு சில நபர்களின் மீது குற்றத்தைத் திணிக்க முயற்சிக்கின்றன. மத்திய அரசின் கைப்பாவையாகச் செயல்படும் இத்தகைய நிறுவனங்கள் மீது, மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர்.
இந்நிறுவனங்கள் மூலம், பொய்யான தகவல்களை மக்களிடம் பரப்பி, ஆளும் பாஜக அரசு, அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது. இத்தகைய செயல்கள், அரசின் மீது பயம், நம்பிக்கையின்மை போன்றவற்றை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளதாகவும், நாட்டில் வன்முறைச் சம்பவங்கள் பெருகி விட்டதாகவும் சர்மா குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய இணையமைச்சர் விஜய் கோயல், மத்திய நிறுவனங்களின் நன்மதிப்பை சர்மா குறைக்க முயல்வதாகவும், அவரது குற்றச்சாட்டில் கடுகளவும் உண்மையில்லை என்றும் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.