உத்தரப்பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் திடீர் தீ
உத்தரப்பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரப்பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரப்பிரதேசம் மாநிலம், ஜான்சி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் நேற்றிரவு திடீரென தீப்பிடித்தது. உடனே இதுகுறித்து தீயணைப்புபடையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்துக்கு பிறகு தீயை அணைத்தனர். விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.