முகப்பு
இந்தியா

ஒடிஸாவில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

ஒடிஸா மாநிலத்தின், மால்கன்கிரி மாவட்டத்திலுள்ள வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாகக்

Updated On : 6 நவம்பர் 2018, 1:00 am IST
பகிர்:


ஒடிஸா மாநிலத்தின், மால்கன்கிரி மாவட்டத்திலுள்ள வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாகக் காவல் துறைத் தலைமை இயக்குநர் ஆர்.பி. சர்மா தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:
மால்கன்கிரி மாவட்டத்திலுள்ள கலிமேலா வனப்பகுதியில், மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாகக் காவல் துறையினருக்குக் கிடைத்த தகவலை அடுத்து, அந்தப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் இரண்டு குழுக்களாகப் பிரிந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்குப் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள், பாதுகாப்புப் படையினரைக் கண்டதும், அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தினர். பதில் தாக்குதலில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினர், 5 மாவோயிஸ்டுகளைச் சுட்டுக் கொன்றனர்.
மேலும், அவர்கள் பதுங்கியிருந்த இடத்திலிருந்து கைத்துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், புகைப்படக் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலில், பாதுகாப்புப் படையினர் யாரும் பாதிக்கப்படவில்லை. 
இதில், மாவோயிஸ்டுகளின் தலைவராகக் கருதப்படும் ரன்தேவ், அங்கிருந்து தப்பிவிட்டதாகத் தெரிகிறது. தப்பி ஓடிய மாவோயிஸ்டுகளைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும், கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளை அடையாளம் காணும் பணியும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments