ராமர் கோவிலைக் கட்ட சட்டம் இயற்றுங்கள்: ஆர்எஸ்எஸ் வலியுறுத்தல்
அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்ட சட்டம் இயற்றுங்கள் என்று வலியுறுத்தி ஆர்எஸ்எஸ் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
புது தில்லி: அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்ட சட்டம் இயற்றுங்கள் என்று வலியுறுத்தி ஆர்எஸ்எஸ் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் தொடர்பான வழக்கை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம்தான் விசாரிக்க முடியும் என்று கூறி உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ஒத்தி வைத்தது.
இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்ட சட்டம் இயற்றுங்கள் என்று வலியுறுத்தி ஆர்எஸ்எஸ் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், 'அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்ட மத்திய அரசு முதலில் நிலத்தினைக் கையகப்படுத்த வேண்டும். பின்னர் அதற்காக பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றுங்கள்' என்று கூறப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
முன்னதாக நாகபுரியில் நடைபெற்ற விஜயதசமி விழாவில் கலந்து கொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட சட்டம் இயற்ற வேண்டும் என்று பேசியிருந்தார்.
அதேபோல் பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனாவும் இதே கோரிக்கையையே முன்வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.