முகப்பு
இந்தியா

அந்தமானில் முப்படைத் தளத்தை பார்வையிட்டார் நிர்மலா சீதாராமன்

அந்தமான்-நிகோபரில் உள்ள ஒருங்கிணைந்த தளத்தில், முப்படைகளின் கூட்டுப் பயிற்சியை பாதுகாப்புத் துறை அமைச்சர்

Updated On : 15 ஜனவரி 2019, 12:48 am IST
அந்தமான்-நிகோபரில் உள்ள முப்படைகளின் ஒருங்கிணைந்த தளத்தை திங்கள்கிழமை பார்வையிடும் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
பகிர்:


அந்தமான்-நிகோபரில் உள்ள ஒருங்கிணைந்த தளத்தில், முப்படைகளின் கூட்டுப் பயிற்சியை பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார்.
இந்தியாவின் தென்கோடி தீவான கிரேட்டர் நிகோபருக்கு நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை வருகை தந்தார். அப்போது, இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் கூட்டுப் பயிற்சியை அவர் பார்வையிட்டார். ராணுவத்தின் மூத்த அதிகாரிகளிடமும் அவர் ஆலோசனை நடத்தினார்.
இது குறித்து, பாதுகாப்புத் துறை அமைச்சகம் சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கேம்ப் பெல் வளைகுடாவில் அமைந்துள்ள தீவுப்பகுதியில் செயல்பட்டு வரும் முப்படைகளின் ஒருங்கிணைந்த தளத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார். 
முப்படைகளின் பயிற்சிகளையும் அவர் மேற்பார்வையிட்டார் என்று தெரிவிக்கப்பட்டிரு ந்தது.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்த முயன்று வரும் வேளையில், அங்கு முக்கிய வழித்தடமாக நிலவும் மலாக்கா ஜலசந்தி அருகே அமைந்துள்ள முப்படைகளின் ஒருங்கிணைந்த தளத்தை நிர்மலா சீதாராமன் பார்வையிட்டது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments