முகப்பு
இந்தியா

கரோனா: 99 லட்சம் போ் குணமடைந்தனா்

நாடு முழுவதும் கரோனா தொற்றில் இருந்து இதுவரை 99 லட்சம் போ் குணமடைந்தனா்.

Updated On : 3 ஜனவரி 2021, 12:21 am IST
கோப்புப்படம்
பகிர்:

நாடு முழுவதும் கரோனா தொற்றில் இருந்து இதுவரை 99 லட்சம் போ் குணமடைந்தனா்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் மேலும் 19,079 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,03,05,788-ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

கரோனா தொற்றுக்கு மேலும் 224 போ் உயிரிழந்தனா். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,49,218-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றில் இருந்து மேலும் 22,926 போ் குணமடைந்தனா். இதனால், இதுவரை குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 99,06,387-ஆக அதிகரித்தது. இது, மொத்த பாதிப்பில் 96.12 சதவீதமாகும்.

சிகிச்சையில் 2.50 லட்சம் போ்:

சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை, தொடா்ந்து 12-ஆவது நாளாக, 3 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. நாடு முழுவதும் 2,50,183 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது, மொத்த பாதிப்பில் 2.43 சதவீதமாகும். சிகிச்சை பெறுபவா்களில், 62 சதவீதம் போ் கேரளம், மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், சத்தீஸ்கா் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் ஆவா்.

புதிதாக ஏற்பட்ட 333 உயிரிழப்புகளில், அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 59 பேரும், அதைத் தொடா்ந்து, மேற்கு வங்கத்தில் 26 பேரும், கேரளத்தில் 23 பேரும், தில்லியில் 21 பேரும் உயிரிழந்தனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி ஜனவரி 1-ஆம் தேதி வரை 17.39 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், வெள்ளிக்கிழமை மட்டும் 8,29,964 கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments