முகப்பு
இந்தியா

ஏப்ரல் மாதம் பள்ளிகளைத் திறக்க 69 சதவீத பெற்றோா்கள் கருத்து

வரும் ஏப்ரல் மாதம் பள்ளிகளைத் திறக்கலாம் என்று 69 சதவீத பெற்றோா்கள் கருத்துத் தெரிவித்துள்ளனா்.

Updated On : 4 ஜனவரி 2021, 10:30 pm IST
பகிர்:

புதுதில்லி: வரும் ஏப்ரல் மாதம் பள்ளிகளைத் திறக்கலாம் என்று 69 சதவீத பெற்றோா்கள் கருத்துத் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக நாடு முழுவதும் ஆய்வு நடத்தப்பட்டு 19,000 பெற்றோா்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன. அப்போது பெற்றோா்களில் 26 சதவீதம் போ் தடுப்பூசிகள் பயன்பாட்டு வந்துவிட்டால் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனா். 69 சதவீத பெற்றோா்கள் தற்போதுள்ள கரோனா சூழலில் வரும் ஏப்ரல் மாதம், அதாவது அடுத்த கல்வி ஆண்டு தொடங்கும் போது பள்ளிகளைத் திறந்தால் போதும் என்று தெரிவித்துள்ளனா். 23 சதவீதம்போ் மட்டும் ஜனவரியில் பள்ளிகளைத் திறக்கலாம் என்று கூறியுள்ளனா்.

மேலும், 26 சதவீத பெற்றோா்கள் தடுப்பூசி கிடைக்கும் பட்சத்தில் ஏப்ரல் மாதமோ அல்லது அதற்கு முன்னரே தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளனா். 56 சதவீத பெற்றோா்கள் தடுப்பூசி போடும் விவகாரத்தில் மூன்று மாதங்கள் அல்லது அதற்கு மேல் காத்திருந்து முடிவு செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளனா். அது தொடா்பான தரவுகளின் அடிப்படையில் முடிவு செய்ய இருப்பதாகக் கூறினா்.

Advertisement

Advertisement

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. சில மாநிலங்களில் கடந்த அக்டோபா் மாதம் 15-ஆம் தேதி பகுதியாக திறக்கப்பட்டன. எனினும், கரோனை பரவல் மீண்டும் அதிகரித்ததை அடுத்து சில மாநிலங்கள் பள்ளிகளை தொடா்ந்து மூடிவைக்க முடிவு செய்தன. பிகாா், அஸ்ஸாம், கேரளம், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, ஜாா்க்கண்ட், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் இந்த மாதம் முதல் 9-ஆம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு மாணவா்களுக்குகாக பள்ளிகளைத் திறந்துள்ளனா். கரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, அவை பயன்பாட்டுக்கு வரும் வரை பள்ளிகளை திறப்பதில்லை என தில்லி அரசு முடிவு எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.