திருவள்ளுவர் நாள்: பிரதமர் மோடி மரியாதை
திருவள்ளுவர் நாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு திருவள்ளுவருக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
புது தில்லி: திருவள்ளுவர் நாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு திருவள்ளுவருக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், “போற்றுதலுக்குரிய திருவள்ளுவரை அவரது பிறந்தநாளில் வணங்குகிறேன். அவரது சிந்தனைகளும் படைப்புகளும் அவரது மகத்தான அறிவையும் அவருக்கு வாய்த்த ஞானத்தையும் பிரதிபலிக்கின்றன. அவரது லட்சியங்கள் தலைமுறைகளைக் கடந்து மக்களிடம் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.
இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் குறளைப் படிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்”, என்று குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.