இந்தியா

ராஜஸ்தான்: பழங்குடியின சிறுமி பாலியல் வன்கொடுமை: 2 போ் கைது

ராஜஸ்தானில் பழங்குடியின சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

DIN

ராஜஸ்தானில் பழங்குடியின சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து காவல் துறையினா் கூறியுள்ளதாவது:

ராஜஸ்தான் மாநிலம் பன்டி மாவட்டத்தில் உள்ள பழங்குடியினத்தைச் சோ்ந்த 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாா். அவரது சடலம், கலகுன்வா கிராமத்தையொட்டிய காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. பரிசோதனை செய்ததில் அவா் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிந்தது.

இதையடுத்து, போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மோப்பநாய் உதவியுடன் குற்றவாளிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடா்புடைய இருவரை கைது செய்யப்பட்டு விசாரித்ததில் சிறுமியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனா். சம்பவம் நடந்த 12 மணி நேரத்தில் குற்றவாளிகளை காவல் துறை கைது செய்தது.

பிடிப்பட்ட இருவா் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காதி - (தெலுங்கு) டிரெய்லர்!

வேணும் மச்சா பாடல்!

கட்டான கட்டழகி... பிரக்ரிதி பவனி!

அஜித் குமாருடன் கைகோக்கும் நரேன் கார்த்திகேயன்!

அழகும் அறிவும்... ஷான்வி ஸ்ரீவஸ்தவா!

SCROLL FOR NEXT